
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொதுநூலக கலைவாணி வாசகர் வட்டத்தின் கலைகலாசார நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது சிறுவர்களின் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றவுடன் இதில் பல்வேறு கண்கவர் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும், பிரதேச சபை செயலாளர் சுப்ரமணியம் சுபராஜ், சன சமுக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் குகநேசன், மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஞானரத்தினம் போன்ற பல முக்கியஸ்தர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
இதன் போது பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பங்கு பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.