
டொமினிகன் குடியரசில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இத்தொடரின் ‘நம்பர்-3’, இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி, பிரேசிலின் புல்லானா, சிலியின் லாப்ரனா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 6-0 என எளிதாக வென்றது சஹாஜா ஜோடி. தொடர்ந்து சிறப்பாக செயல்பட, அடுத்த செட்டையும் 6-3 என வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.