
சி.ஓவ்.ஸ்ரீலங்கா கடற் பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல் துறை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு போரையும் ஊர்காவல் துறை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோதே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் மேற்கண்ட கட்டளையை பிறப்பித்துள்ளார்.
சி ஒவ் ஸ்ரீலங்கா எனும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 படகுகளுடன் 181 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.