
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று(01.03) எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
வடமராட்சி பகுதியில் மத்திகை, பருத்தித்துறை , வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசை அலைமோதிய வண்ணமுள்ளது.
பெற்ரோலியக் கூட்டுத் தாபனத்தின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புக்காக பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.