
முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் வீதியால் உந்துருளியில் வந்த பெண்ணை திருடர்கள் வழிமறித்து குறித்த பெண்ணின் கழுத்தில் கத்திவைத்து நகைகளைத் திருடியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் குறித்த திருடர்களை மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முள்ளியவளை, பொன்னகர் பகுதியைச்சேர்ந்த குறித்த பெண்ணை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 17.07.2025 நேற்று நேரில்சென்று பார்வையிட்டதுடன், சம்பவம்தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் இதன்போது கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன் இந்தச்சந்திப்பில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.