
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹர்த்தாலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகர், முள்ளியவளை,மாஞ்சோலை, தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களின் சகல வர்த்தக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு நகர் முற்றாக வெறிச்சோடியதோடு தனியார் போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்று வருகிறது.