
திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கலைமகள் மகா வித்தியாலத்திற்கு ரூபா 60000 பெறுமதியான இசைக்கருவி புலம்பெயர் உறவினர் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் இன்று (07) பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பாடசாலையின் அதிபர் சட்சிவானந்தம் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேசசபை உறுப்பினர் துறைராசா தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் இதன் போது தமிழ் மொழி தினப் போட்டாயில் வலய மட்ட மாகாண மட்டத்தில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.