
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தக்கோட்டைமீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 222ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு (25) இன்று கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், கலைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் இராஜயோகினி ஜெக்குமார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.