
சமீபத்தில் நடைபெற்ற மஹா கும்பமேளா விழாவில் பாசி மாலை விற்று வைரலான சாதாரண பெண் மோனாலிசா தனது அழகில் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருடைய மனோகரமான அழகினால் மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளார். பலர் இவரை பார்த்துக்கொள்வதற்காக கும்பமேளாவை சென்றுள்ளதை கவனத்தில் வைத்து இயக்குநர் ஒருவர் சமீபத்தில் அவர் படத்தில் மோனாலிசாவை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்.
தற்போது இவர் செம்மனூர் என்னும் இடத்தில் ஜூவல்லரி கடை ஒன்றினை திறந்து வைத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.மேலும் மோனாலிசாவினை பாராட்டும் முகமாக பாபி செம்மனூர் வைர நெக்லெஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். இது மோனாலிசாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடை திறப்பு விழாவில் பாபி செம்மனூர் உடன் சேர்ந்து மோனலிசா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. இதில் பாபி பேய் ஆட்டம் ஆடியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சத்தமிட்டு சிரித்துள்ளனர்.இந்த தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.