
கடந்த 31.07.2025 அன்று பரந்தன் சந்தியில் டிப்பர் வாகன விபத்தில் சிக்கி.உயிரிழந்த யுவதியின் வீட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் குறித்த யுவதியின் மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சட்ட உதவியை தருவதாக குறித்த யுவதியின் குடும்பத்தினருக்கு உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் வாரம் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் நேற்றையதினம் (13) குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களுடன் கலந்துரையாடினார்.