
கடந்த 31.07.2025 அன்று பரந்தன் சந்தியில் டிப்பர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதியின் குறித்த யுவதியின் மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சட்ட உதவியை தருவதாக குறித்த யுவதியின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் நேரில் சென்று உறுதியளித்திருந்தார்.
அந்த வகையில் இவ் வழக்கில் நேற்றையதினம் (19) கிளிநொச்சி நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.
மேலும்இவ் வழக்கு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த விபத்தில் டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி போதைப்பொருள் பாவித்து விட்டு வாகனத்தை செலுத்தியதாக வைத்தியர்களின் அறிக்கையில் கூறியுள்ளதாகவும், அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் கோரிக்கையில் பிணையில் விடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க நீதிமன்றத்தில் அவரது பிணையானது நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த வாகனத்தினுடைய உரிமையாளரையும் இவ் வழக்கில் சந்தேக நபராக சேர்த்துக்கொள்ளும் படி சுமந்திரன் அவர்கள் நீதிமன்றில் விண்ணப்பம் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஏனென்றால் போதைப்பொருள் பாவித்த ஒருவரிடம் வாகனத்தை செலுத்த கொடுத்தமையால் வாகனத்தினுடைய உரிமையாளரும் பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.