
2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள எம் நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களின் தலமையில் சட்ட ஆலோசனை முகாம் இன்றைய தினம் 25.05.2025 நடைபெற்றது.
இதில் 30 வரையான சட்டத்தரணிகளும் 15 சட்டப்பீட மாணவர்களும் இந்த இலவச சட்ட ஆலோசணை வழங்கும் செயற்பாட்டில் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களும் சயந்தன் அவர்களும் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.