
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹர்த்தாலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள்,சந்தை முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் நகரின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.