
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் 17.08.2025 ஆம் திகதியான நேற்று வாராந்த சந்தை குழுமாட்டுச் சந்தி – நெளுக்குளம் பகுதியில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களின் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இச் சந்தையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழில் துறை சார் உற்பத்திப்பொருட்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் விற்பனைப் பொருட்களையும் நேற்றிலிருந்து பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் விற்பனை செய்யமுடியும் எனவும் இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோர்களின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வாழ்வாதாரத்தினை திடப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தை தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மாலை வரை நடைபெறும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் வவுனியா நகரசபையின் மேஜர், பிரதி மேஜர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, நெளுக்குளம் கிராம சேவையாளர் ,சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.