
2025 ஆம் ஆண்டு மாபெரும் மரநடுகை விழாவானது இன்று (03.8.2025) ஞாயிற்றுக்கிழமை மு/வற்றாப்பளை மகா வித்தியாலய முன்றலில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இவ் விழாவானது வற்றாப்பளை இளைஞர் ஒன்றியமும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையும் இணைந்து “இயற்கையை காப்போம் இன்பமாய் வாழ்வோம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் மரநடுகை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திரு.சி.லோகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி.இராசயோகினி ஜெயக்குமார், வற்றாப்பளை மகா வித்தியாலய அதிபர் திரு.சி.வரதராஜன் வற்றாப்பளை கிராம அலுவலகர் திரு.சு.கரிகாலன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், இவ்விழாவில் பிரதேச நலன்விரும்பிகள், சூழலியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,மற்றும் பிரதேச வாழ் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.