
கரைத்துறைப்பற்று பிரதேச சபை முல்லை கடற்கரையில் பெருமையுடன் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் நடாத்தி வரும் பௌர்ணமி விழா கலைநிகழ்வானது எதிர்வரும் (8.8.2025) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்விழாவினை திருவாளர் அயத்திநாதன் தலைவர் சுற்றுலாப்பணியகம் வடமாகாணம் (முன்னாள் முல்லைத்தீவு அரச அதிபர், முன்னாள் பிரதம செயலாளர் வடமாகாணம் ) அவர்களது பங்கேற்புடன் கரைத்துறைப்பற்று பிரதேச சபையுடன் வட மாகாண சுற்றுலாப்பணியகம் இணைந்து நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இவ் விழாவின் பகல் நிகழ்வு மாலை 4 மணிக்கு கடற்கரை மணலில் தெரிவு செய்யப்பட்ட கழகங்களின் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் அரங்க நிகழ்வு மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை பாடசாலை மாணவர்களது நடன நிகழ்வும் இன்னிசை இசை நிகழ்வும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.