
“கறுப்பு யூலை 1983” நினைவேந்தல் நிகழ்வு நேற்று (23) மாலை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஈழத்தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், போலி சகோதரத்துவ நாள் வேண்டாம் – உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் வேண்டும், 1983 கறுப்பு யூலை ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பே! உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுள் கட்டப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி க.சுகாஸ், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.