
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘டைட்டன்ஸ் ஸ்பேஸ்’ திட்டமிட்டுள்ள விண்வெளி பயணத் திட்டத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டைட்டன்ஸ் ஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், 2029ல் விண்வெளிக்கு தன் முதல் செயற்கைக்கோளை அனுப்ப உள்ளது. இதில், மனிதர்களையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவைச் சேர்ந்த ஜான்வி டாங்கெட்டி, 23, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜான்வி, நாசாவின் சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை நிறைவு செய்துள்ள முதல் இந்தியர் ஆவார்.