
“தூய்மையான பிரதேசத்தை உருவாக்குவோம்” என்ற வேலைத்திட்டத்தில் பராமரிக்கப்படாமல் இருக்கும் பற்றைக்காணிகளுக்கு அறிவுறுத்தல் வழக்கும் வேலைத்திட்டம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் இன்றைய தினம் கரணவாய் அண்ணாசிலையடி வட்டாரத்தில் ஆரம்பிக்கப்படுகின்றது.
அத்துடன் அனைத்து வட்டாரங்களுக்கும் இந்த வேலைத்திட்டம் ஒரு கால அட்டவணையில் நடைபெற இருக்கின்றது.
ஆகவே தூய்மையான பிரதேசத்தை உருவாக்கும் எமது வேலைத்திட்டத்திற்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

