
மன்னார் பொதுவைத்தியாசாலையினை மத்திய அரசின்கீழ் கொண்டுவருவதற்கு மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றுவதற்கு முயற்சியெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த முயற்சிக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரால் மிகக்கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
குறிப்பாக அதிகாரப்பகிர்வு நோக்குடன் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கைளை மீளவும் மத்திய அரசிற்கு கையளிக்கும் இந்தச் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாதெனக்கூறியே நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோரால் எதிர்ப்புவெளியிடப்பட்டது.
இருப்பினும் ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையில் வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்தவளப் பற்றாக்குறைகளைத் தீர்க்க மாகாணசபை அந்தவளப்பற்றாக்குறைகளத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லைஎனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், குறித்த மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்படவேண்டுமெ கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதனைமறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய அரசின்கீழ் குறித்த வைத்தியசாலையை கொண்டுவரமுடியாதெனவும், வளப்பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு மாகாணசபையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமெனவும் தெரிவித்தனர்.