
கிண்ணியா நகர சபைக்கான ஆலோசனைக் குழுவை ஆரம்பித்தல் ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனணைக்குழுவை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் இடம்பெற்றது.
கிண்ணியா நகர சபையின் எதிர்கால செயற்பாடுகள், வேலை திட்டங்கள், நீண்டகால குறுகியகால வேலைத் திட்டங்கள் மற்றும் சபை எதிர் நோக்குகின்ற சவால்கள் போன்ற பல விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனணைக்குழுவை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் இடம்பெற்றது.
நகர சபை கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம்.எம் மஹ்தி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (4) மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் உலமா சபை, சூரா சபை, பள்ளி சம்மேளனம், பிரதேச செயலகம், அல் மபாரா தரும நிதியம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது சுகாதார வைத்திய அதிகாரி, திட்டமிடல் பணிப்பாளர், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் வர்த்தகர்கள், மீனவ சங்கம், உதை பந்தாட்ட சம்மேளனம் என பல்வேறு சமூக நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கல்வி மான்கள் துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 2025.07.11ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 00 மணிக்கு அடுத்த அமர்வை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.