
சுமார் 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார்124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளையும் ஏற்றிச் சென்ற இந்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அந்த படகில் இருந்த 5 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.