
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் உடுத்துறையல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதான முன்றலில் இன்று மாலை ஆறு மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பிரதேச சபை உறுபரபினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.