வாஷிங்டன், குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள தன் மகன் ஹண்டர் பைடனுக்கு, பொது மன்னிப்பு வழங்குவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. துப்பாக்கி வர்த்தகம் தொடர்பாக ஒரு வழக்கும், வரி மோசடி தொடர்பாக ஒரு வழக்கும் அவர் மீது, டலாவரே மற்றும் கலிபோர்னியா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி வர்த்தக மோசடி வழக்கில், 17 ஆண்டுகள் வரையும், வரி ஏய்ப்பு வழக்கில், 25 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
VADALI TV