அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு நிறுவனமான, ‘யுனைடெட் ஹெல்த்கேர்’ சி.இ.ஓ., பிரையன் தாம்சன், 50, நேற்று மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் நிறுவனம் யுனைடெட் ஹெல்த் குழுமம். மருத்துவ காப்பீடு சேவை வழங்கும் இந்நிறுவனம், உலகின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் வகிக்கிறது.
இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., பிரையன் தாம்சன், நியூயார்க்கின் ஹில்டன் ஹோட்டலில் நடக்க இருந்த நிறுவன மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் வந்தார். காரில் இருந்து இறங்கி ஹோட்டலை நோக்கி நடந்த சென்றவரை, பின் தொடர்ந்து வந்த நபர், மறைத்து வந்திருந்த கை துப்பாக்கியால் பின்னாள் இருந்து சுட்டார்.
VADALI TV