
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் (22) நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு
எனது அன்பு நண்பர் பிரதமர் மோடி. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் டஜன் கணக்கான அப்பாவிகளைக் கொன்று காயப்படுத்திய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் நிற்கிறது.
ஐ.நா., கண்டனம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர், ” பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றார்.