இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA) நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததையடுத்து, மறு அறிவித்தல் வரை நிரோஷன் திக்வெல்லவை அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த தடைக்கு எதிராக திக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்தார்.
அந்த முறையீட்டின் பிரகாரம் திக்வெல்ல இந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளார்.
நிரோஷன் திக்வெல்ல சார்பில் சட்டத்தரணி சுமிந்த பெரேரா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ரணில் பிரேமதிலக்க ஆகியோர் ஆஜராகியிருந்தன