நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் நேற்று (22) கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம், பாடசாலைகளில் கற்றல்-கற்பித்தல் செயல்முறையை பேணுவதற்கு இன்றியமையாத காரணியான குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் சுகாதார துவாய் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த சுகாதார திட்டத்தை, பெண் மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும், நிதி பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
இதன்மூலம் சுசுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கு இலவச வவுச்சர் வழங்க அப்போதைய கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.