பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here