குவைத் மன்னரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி

43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.

மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த வளைகுடா நாட்டுக்கு, 43 ஆண்டுகளுக்குப்பின், இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.

குவைத் மன்னரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். ‘அரேபிய வளைகுடா கோப்பையின் துவக்க விழாவின் போது, குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்தது மகிழ்ச்சி’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here