
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் பூந்தோட்டம் பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்றது.
குறித்த பிரச்சாரக்கூட்டத்தில் முதன்மை அதிதியாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.
அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்,மற்றும் மாநகரசபையின் ஏனைய வட்டாரங்களின் வேட்பாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜந்தாம் வட்டாரமான குடியிருப்பு பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் தேசியமக்கள் சக்தி சார்பில் நேரடி வேட்பாளராக கனகரத்தினம் கிருஸ்ணதாஸ் ,பட்டியல் வேட்பாளராக கணேசன் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது