அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக மார்கோ ரூபியோ, அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு, வாஷிங்டனில் நடந்த குவாட் வெளியுறவுத் துறை அமைச்சர் மாநாட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாஷிங்டனில் நடந்த குவாட் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற சில மணி நேரங்களுக்கு பிறகு கூட்டம் நடைபெற்றது. குவாட் அமைப்பு உலகளாவிய நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும். எப்பொழுதும், இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக மார்கோ ரூபியோ நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரை, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ‘அரசாங்க செயலாளராக பதவியேற்ற பிறகு, மார்கோ ரூபியோவை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்து குறித்து விவாதம் நடத்தினோம்.
நமது இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.