காஸா மருத்துவமனையை எரித்தது இஸ்ரேல்

காஸாவின் வடக்குப் பகுதியில் செயல்படும் மருத்துவமனையை இஸ்ரேல் படைகள் தீயிட்டு எரித்தன. காசாவில் பல்வேறு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி உள்ளது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்ட இந்த சம்பவத்தை ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

சுகாதார அமைச்சக இயக்குனர் முனீர் அல் பர்ஷ், ‘இஸ்ரேல் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து அதை தீயிட்டு எரித்து வருகிறது’ என குற்றம் சாட்டி உள்ளார். காஸாவில் மற்ற இடங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய ராணுவம் மறுத்துள்ளது. அந்த மருத்துவமனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளமாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டி உள்ளது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here