2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, சமூக ஊடகங்களில் கசிந்ததாக கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VADALI TV