புலமை பரிசில் பரீட்சை முறைகேடு – தீவிரமடையும் விசாரணை

2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர், பேராசிரியர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று இடம்பெற்றுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எட்டு வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பெற்றோர் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழு வெளியான வினாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here