கிங்ஸ்டன்: கிங்ஸ்டன் டெஸ்டில் வங்கதேச அணி 286 ரன் முன்னிலை பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 164 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 70/1 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (33), கீசி கார்டி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பிராத்வைட் 39 ரன்னில் அவுட்டானார். இதன் பின் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கார்டி மட்டும் அதிகபட்சம் 40 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 85/1 என இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்து 61 ரன் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேசத்தின் நாஹித் ராணா 5 விக்கெட் சாய்த்தார்.