பங்களாதேஸ் துணைதூதரகத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏழுபேரை இந்தியாவின் திரிபுரா மாநிலபொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பங்களாதேஷ் துணைதூதரகத்தின் முன்வாயிலை உடைத்த சிலர் சொத்துக்களிற்கு சேதப்படுத்தியதுடன் பங்களாதேஷ் கொடியை சேதப்படுத்தினார்கள் என பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்ததை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துணைதூதரகத்திற்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவேண்டும் என பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது.
பங்களாதேசில் இந்துமத தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்துமதத்தை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ள இந்து சங்காச சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்களே கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர்.
சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் முன்வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பங்களாதேஷ் கொடியை கிழித்தனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
துணைதூதரகத்திற்கு வெளியே சுமார் 4000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.