ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் இரண்டு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியிலிருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
VADALI TV