ரஷ்யா – உக்ரைன் போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக கருதும் ஐரோப்பிய நாடுகள் பல சாத்தியமான போருக்குத் தயாராகும்படி தங்கள் குடிமக்களை ஊக்குவித்து வருகின்றன.
முக்கிய ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனியும் ஸ்வீடனும் இதில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனி இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அலைபேசி செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
அணுகுண்டு தாக்குதல் நடந்தால் என்ன செய்வது என்பது குறித்த வழிகாட்டியை சுவீடன் வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி, ஐரோப்பா முழுக்க ஒருவகையான பீதி பரவியுள்ளதாகவே கூறுகின்றனர்.
ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் Boris Pistorius தெரிவிக்கையில், மிக விரைவில் குடிமக்களை போருக்கு தயாராகும் நிலைக்கு கொண்டுவருவோம் என்றார்.
மனிதகுலத்தின் முடிவுக்கு விளாடிமிர் புடின் காரணமாவார்… ரஷ்யாவின் மிக ஆபத்தான நபர் எச்சரிக்கை
மனிதகுலத்தின் முடிவுக்கு விளாடிமிர் புடின் காரணமாவார்… ரஷ்யாவின் மிக ஆபத்தான நபர் எச்சரிக்கை
இதனிடையே, உக்ரைன் – ரஷ்யா போர் 1000 நாட்களைக் கடந்துள்ள நிலையில், பிரித்தானியா மிக ஆபத்தான ஏவுகணை தொகுப்பு ஒன்றை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில், பல ஐரோப்பிய தலைவர்கள் ஆயத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ஃபின்லாந்தும் ஸ்வீடனும் பல தசாப்தங்களாக அணிசேராத முடிவை கைவிட்டு உத்தியோகப்பூர்வமாக நேட்டோவில் இணைந்துள்ளன.
தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு ஸ்வீடன் தங்கள் குடியிருப்பாளர்களுக்குத் தயாராக இருக்குமாறு அவர்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை அனுப்பியுள்ளது. அதில், நாம் நிச்சயமற்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் வாழ்கிறோம்.
உலகின் மூலை முடுக்கில் தற்போது ஆயுத மோதல்கள் வெடித்துள்ளன. பயங்கரவாதம், இணையத் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல் பரப்புரைகள் நம்மைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், செல்வாக்கு செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் துண்டுப் பிரசுரங்களின் ஸ்வீடன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஸ்வீடனின் சுதந்திரத்தையும், நமது ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரும் ஸ்வீடனின் ஒட்டுமொத்த அவசரகாலத் தயார்நிலையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேவைக்கும் அதிகமான குடிநீரை சேமிக்கவும், ஏராளமான போர்வைகள், பேற்றரியில் இயங்கும் ரேடியோ மற்றும் நீண்ட காலத்திற்கு தேவையான உணவுகளை நிறைய சேமித்து வைக்கவும் கோரியுள்ளன.
ஜேர்மனியை பொறுத்தமட்டில், 84 மில்லியன் மக்களுக்கு தற்போது 600 தங்கும் முகாம்கள் இருப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 480,000 மக்கள் மட்டுமே தங்க முடியும்.
இதனியடுத்து, பதுங்கு முகாம்களை அமைக்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. அத்துடன், தாக்குதல் நடந்தால், மக்களுக்கு உதவும் பொருட்டு ஒரு வரைபடத்தை அறிமுகப்படுத்தவும் ஜேர்மனி முடிவு செய்துள்ளது.